கர்நாடகாவில் 56 வயது காவலர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு.!
கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள் நேற்று உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலத்தில் 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள், சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதித்து கலாசிபல்யாவில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதாவது நேற்று உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தோற்று காரணமாக காவலர்களில் இரண்டாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதலில் வி வி புரம் போக்குவரத்து காவல் நிலையத்தின் உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்த கான்ஸ்டபிள் கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்த 9 பேரில் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.