நாட்டில் 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-சுகாதாரத்துறை..!

நாட்டில் இதுவரை 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 57,88,90,150 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் இதுவரை மொத்தமாக 56,06,52,030 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 94,03,637 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு 56.06 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025