அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்தவிருந்த 55 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் பகுதியில் அரசு சார்பில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொண்ட உணவு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கிருந்து தான் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்காக அரசு வழங்கியுள்ள 55 டன் அரிசியை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் விற்கப்படுவதாக மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மள்ஞ்சாப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து உணவு கிடங்கிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஏராளமான அரசி மூட்டைகள் லாரியில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அங்கிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் உணவு கிடங்கில் மக்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த 55 டன் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து புதுப்பித்து லாரியில் கேரளாவுக்கு கடத்தி சென்று விற்க இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவர்களிடமிருந்து 55 டன் அரிசி, ஒரு லாரி, 2 கார்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 5 பேரான இஸ்மாயில் பாரி, முஸ்தபா தவுபிக், உபேதுல்லா, முகமது மேல்ரா, நியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான விசாரணை நடந்து வருகிறது.
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…