மாஸ் லீவு போட்ட இண்டிகோ ஊழியர்கள் 55% விமான சேவை தாமதம் இது வேற லெவல்
இண்டிகோவின் உள்நாட்டு விமான சேவையானது சனிக்கிழமையன்று ஐம்பத்தைந்து சதவீதம் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இண்டிகோ கேபின் குழுவில் குறிப்பிடத்தக்க பகுதியினர் விடுப்பு எடுத்துள்ளனர்.
இப்படி விடுப்பு எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் உடல்நிலை சரியில்லை என்று கூறி எடுத்துள்ளனர்.ஆனால், இவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்த நேர்காணலுக்கு சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனது நிறுவனத்திற்க்கான வேலைவாய்ப்பு நேர்காணலை இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை நடத்தியது.
இதற்கு முன்னர்,ஏப்ரல் 4 அன்று, ஊதியக் குறைப்புக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருந்த சில விமானிகளை இண்டிகோ சஸ்பெண்ட் செய்தது.
இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ரோஞ்சாய் தத்தா ஏப்ரல் 8 ஆம் தேதி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சம்பளத்தை உயர்த்துவது கடினமான மற்றும் கடினமான பிரச்சினை என்றும், ஆனால் விமான நிறுவனம் அதன் லாபம் மற்றும் போட்டி சூழலின் அடிப்படையில் ஊதியத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து மாற்றியமைக்கும் என்று கூறியிருந்தார்.