#BiharElection2020 : 6 மணி வரை எவ்வுளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?
பீகார் தேர்தலில் 6 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் நடைபெற்றது . இந்த தேர்தலில் மொத்தமாக 1204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைக்கு இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 55.73% வாக்குகள் பதிவாகியுள்ளது.