இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,87,705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 2 மில்லியனை நெருங்கியதாகவும், இந்த பாதிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேறு எந்த எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 28,859 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், இந்த உயிரிழப்பு இது முந்தைய மாதங்களின் எண்ணிக்கையிலிருந்து 50% அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 36.8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,87,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 54% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,87,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் (19 , 04,462) பதிவான தொற்று நோய்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
ஆனால் உயிரிழப்பை பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவை விட அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் 30 வரை அமெரிக்காவில் கிட்டத்தட்ட 31,000 உயிரிழப்புகளும், பிரேசில் 29,565 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 28,859 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 28.3 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை இந்தியாவில் 65,000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். இதுவே அமெரிக்காவில் (1.87 லட்சம்) மற்றும் பிரேசில் (1.2 லட்சம்) பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…