ஆடம்பர வாழ்க்கையால் வங்கிக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!
எஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர், வங்கியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று கூறி, உயர் அதிகாரிகளுக்கு கோல்டன் பின் என்ற பெயரில் விருதுகளை வழங்கிய அவர், மும்பையில் உள்ள தமது ஆடம்பர வீட்டில் பிரம்மாண்டமான விருந்து வழங்கும் விழா நடத்தி வந்துள்ளார். பின்னர் மற்ற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து கடன் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கடன்களை வாரி வழங்கியதுடன், வங்கிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததால், வங்கிக்கு சுமார் ரூ.54,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வங்கி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராணா கபூரை காவலில் எடுக்க மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவில், திவான் ஹவுசிங்கில் இருந்து ரூ.600 கோடி பிரதிபலம் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை ராணா கபூரின் செயலாளர் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் அனுமதி கொடுத்தனர். இந்நிலையில் நேற்று மும்பை விமான நிலையத்தில் ராணா கபூரின் மகள் ரோஷிணி வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.