#BREAKING: 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி.!

மும்பையில் இன்று 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையெடுத்து, செய்தியாளர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சற்று நேரத்திற்கு முன் தெரிவித்தது.மேலும் , செய்தியாளர்களுக்கு யாருக்கெல்லாம் பரிசோதனை தேவையோ அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மும்பை நகரில் புகைப்படக் கலைஞர்கள், வீடியோ பத்திரிகையாளர்கள் மற்றும் நிருபர்கள் உட்பட, 171 பத்திரிகையாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அதில், 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025