இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5274 உயர்வு.!

Default Image

கொரோனா வைரசால் உலக நாடுகளில் பாதிப்பும் , உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே உள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவால் 1,447,618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் 83,401  பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்  எண்ணிக்கை 309,147 உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க தவிர வேற எதற்காகவும் பொதுமக்கள் வெளியில் வர கூடாது எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் இன்று காலை வரை 5194 பேர் இருந்த நிலையில் தற்போது 5274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 411 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 149 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்