கனமழை பாதிப்பு.! கர்நாடகாவில் 52 பேர் உயிரிழப்பு.! நிவாரணம் அறிவித்த முதல்வர் சித்தராமையா.!
பருவமழைக்கு முந்தைய கனமழையின் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் சித்தராமையா.
கர்நாடகாவில் பருவமழைக்கு முன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து நிவாரண அறிவிப்புகளை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்த கனமழையின் காரணமாக இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 331 கால்நடைகள் இந்த கனமழை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், 20,000 ஹெக்டேரில் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேரவேண்டிய உதவி தொகை விரைந்து கிடைக்கப்பெற்ற வழிவகை செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .