52 லட்சம் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.10,000 பெறுகின்றனர்..! பா.ஜ.க

Default Image

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பொறுப்பாளர் அருண் சிங், காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

கர்நாடகாவின் பாஜக பொறுப்பாளர் அருண் சிங், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து, பாஜக ஆட்சியில் மாநிலத்தில் 52 லட்சம் விவசாயிகளின் கணக்குகளில் ரூ.10,000 பெறுகின்றனர், ஆனால் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க காங்கிரஸ் கட்சி செயல்படவில்லை என்று கூறினார். கர்நாடகாவில் நடைபெற்ற பாஜக கமிட்டி கூட்டத்தில் அர்ஜூன் சிங் கலந்து கொண்டார்.

Arun Singh 1

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” கர்நாடகாவில் 52 லட்சம் விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் ரூ.10,000 பெறுகின்றனர். ‘ரைதா சக்தி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கர்நாடகாவுக்கான ரயில்வே பட்ஜெட் ரூ.7,500 கோடிக்கும் அதிகமாக உள்ளதாகவும்” கூறினார்.

budget2023bjp

இதையடுத்து காங்கிரஸ் அரசாங்கம் இருந்தபோது மக்களுக்கு திட்டங்கள், சுகாதார வசதிகள் மற்றும் சாலைகள் அமைப்பதில் அவர்கள் எந்தவித வேலையும் செய்யவில்லை என்றும் நாங்கள் அரசாங்க திட்டங்களின் கீழ் 8 லட்சம் வீடுகளை வழங்கியுள்ளோம்” என்று அர்ஜுன் சிங் மேலும் கூறினார்.

congress14

2023-24 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 50 சதவீத பணிகள் முடிக்கப்படவில்லை என்று கூறினார். இது ஒரு தேர்தல் அறிக்கை பட்ஜெட்டாக இருக்கும். பாஜக அரசு ஊடகங்களில் அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்குவதில் மட்டுமே உள்ளது என்று சிவகுமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்