காணொலி வாயிலாக இன்று 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.! 

Finance Minister Nirmala Sitharaman

மத்திய நிதியமைச்சகத்திற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான பரிந்துரை மற்றும் முக்கிய முடிவுகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற உள்ளது.

51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு மாநில அரசின் சார்பில் நிதி அமைச்சக முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது ஆன்லைன் சூதாட்டம் , கேம்பளிங், குதிரை பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் 28 சதவீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இதில் உள்ள சிக்கல்கள், எவ்வாறு நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்