மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 5024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 5024 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,139 ஆக உயர்ந்துள்ளது. அதில், 2,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 79,815 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு 65,829 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…