50,00,000 கிலோ பட்டாசு…கோர்ட்டு உத்தரவை காற்றில் பறக்க விட்ட தீபாவளி…!!
டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. மேலும் குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடையும் விதிக்கப்பட்டது. தலைநகர் டெல்லி ஏற்கனவே காற்று மாசு காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பெருமளவு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக பதுக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் பட்டாசு வெடிப்பில் எந்தஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது.டெல்லியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்றின் மாசு ஏற்கனவே இருந்த அளவைவிடவும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com