சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இதனிடையே, பொதுமுடக்கத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் நாடும் கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கான ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு என்றும் இந்த திட்டத்தில் ரூ. 10,000 வரை கடன் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…