உத்திர பிரதேசத்தின் முக்கிய மாவட்டங்களுக்கு 50,000 ஆன்டிஜன் சோதனை கருவிகள்!
கொரானா வைரஸ் கிருமியை கண்டறியும் 50,000 ஆன்டிஜென் சோதனைக் கருவிகளை உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் வாங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தியாவிலும் ஆறு லட்சத்தை கடந்து கொரானாவின் பாதிப்பு சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் 24 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அங்கு உள்ள முக்கிய மாவட்டமான மீரட் பகுதியில் கொரானா வைரஸ் வழக்குகள் சரியாக கணக்கிட படாமல் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்பநலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் பிரசாத் கூறியுள்ளார். இதனை கண்டறிய யோகி ஆதித்யநாத் அரசாங்கம் 50,000 ஆன்டிஜன் சோதனைக் கருவிகளை வாங்கி உள்ளது. மீரட் பிரிவில் உள்ள வழக்குகள் கவலைக்குரியவை என்றும் ஆக்கிரமிப்பு சோதனை திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் சுகாதார நலத் துறை தலைமை செயலாளர் பிரசாத் கூறியுள்ளார்.