ஹரியானாவில் உள்ள ஹனுமான் கோவிலில் திருடன் ஒருவன் ரூ.5,000 திருடி தப்பிச் சென்றுள்ளார்
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் இருந்து, திருடன் ஒருவன் உண்டியல் பெட்டியை உடைத்து ரூ.5,000 பணத்தை திருடிச் சென்றுள்ளான். திருடிவிட்டு அனுமனுக்கு பூஜை செய்து ரூ.10 நோட்டை வைத்துவிட்டு தப்பு சென்றுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அவர் திருடுவதற்கு முன்னதாக, ஹனுமான் சாலிசாவை சுமார் பத்து நிமிடங்கள் ஓதி, களிமண் விளக்கை ஏற்றி வைத்துள்ளார். பின் கருவறையில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உண்டியல் பெட்டியை உடைத்து, ரூ.5,000-தை எடுத்து தப்பிச் சென்றுள்ளார்.
திருட்டு நடந்ததை அறியாத கோவில் பூசாரி கோயில் கதவை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்டுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது, உண்டியல் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…