இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
நாட்டில் இணையதள குற்றங்கள் 500% அதிகரித்துள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய இணையதள மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பணத்தை கையாளும் முறை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ள நிலையில், இணையதள பணபரிவர்த்தனையை அதிகம் சார்ந்து உள்ளதாக தெரிவித்தார். இதனால் இணையதளம் மூலம் தகவல் பரிமாற்றமும் அதிகரித்துள்ளது. இதுதவிர சமூக வலைதளங்கள் மூலமாக கருத்து பரிமாற்றமும் அதிகரித்து உள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இணைய தளங்களை கண்காணிப்பதில் நாம் சிறப்பாக செயப்பட்டு வரும் நிலையில், சில விரும்பத்தகாத காரணிகளும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இணையதள குற்றங்கள் 500 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக தெரிவித்த அஜித் தோவல், இதற்கு காரணம் இணையதள நடவடிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் முறையற்ற பயன்பாடுகளும் தான் என குறிப்பிட்டுள்ளார்.