மின்சாரம் திருடியவருக்கு 50 மரம் நட நீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் கடை நடத்தி வரும் ஒருவர் முறையாக கடை வாடகை கொடுக்காமல் இருந்ததால் கடை உரிமையாளர் மின் இணைப்பை துண்டித்து விட்டார்.பின்னர் அந்த கடைக்காரர் மின் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த மின்சார வாரியம் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தது.
அப்போது கடை உரிமையாளர் தனக்கு தெரியாமல் கடைக்காரர் இணைப்புக் கொடுத்து பயன்படுத்தியதாக மின்வாரியத்திடம் கடை உரிமையாளர் கூறினார். பின்னர் வாடகைக்கு இருந்த கடைக்காரன் மீது மின் வாரியம் வழக்கு பதிவு செய்தது.
இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் சச்தேவா சமூக சேவையாக கடைக்காரர் டெல்லியின் வந்தேமாதரம் பூங்கா , புத்தர் ஜெயந்தி பூங்கா , மத்திய வனப் பகுதியில் ஒரு மாதத்தில் 50 மரக்கன்றுகள் நட வேண்டும்.
இதுகுறித்து ஆறுவார காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மரம் நடுவதற்கு முன் , மரம் நட்ட பின் எடுத்த புகைப்படங்களை இணைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.