50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடக அரசு!

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அம்மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியா மமுழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலங்களும் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அம்மாநில அரசு, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, 6 முதல் 9 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் எனவும், வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீச்சல் குளங்கள், ஜிம், உள்ளிட்டவை மூடப்படுவதாகவும், வழிபாட்டுத் தலங்களில் எந்தவித கூட்டமும் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்தவித போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது எனவும், திரையரங்குகள், உணவகங்கள், பார்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி, வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025