நீதிதுறையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு- தலைமை நீதிபதி என்.வி.ரமணா ..!
நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற பெண்கள் வழக்கறிஞர் கூட்டத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஓடுக்கப்பட்டுள்ளதாகவும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் நீதிபதிகள் உள்ளனர்.
உயர்நீதிமன்றங்களில் 11.5 சதவீதம், உச்சநீதிமன்றத்தில் 11 முதல் 12 சதவீதம் பேரும் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர். நீதிபதி பணியிடங்களில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும், சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கேட்பது பெண்களின் உரிமை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.