அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இன்று தீர்ப்பு!

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இதனையடுத்து, இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், மத்திய அரசு மற்றும் சில மருத்துவர்கள் சார்பில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்ய கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, புதன்கிழமை விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க உள்ளது.