இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரி 50% குறைப்பு ….!
மகாராஷ்டிரா அரசு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரியை 50% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படக்கூடிய ஸ்காட்ச் விஸ்கியின் விலை மற்ற மாநிலங்களின் விலைக்கு இணையாக கொண்டு வருவதற்காக அதன் மீதான கலால் வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலால் வரி 300 சதவீதத்திலிருந்து உற்பத்தி செலவில் 150 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 100 கோடி வருவாய் வந்த நிலையில், இனி 2.5 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்பதால் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும், இந்த வரி குறைப்பு மற்ற மாநிலங்களிலிருந்து ஸ்காட்ச் கடத்தப்படுதல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவும் உதவும் என கூறப்படுகிறது.