5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவ திட்டம் -சிவன்.!
- நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
- பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டுமே 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவதிட்டமிடப்பட்டு இருக்கிறோம் என கூறினார்.
நேற்று பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.இந்த செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, ராணுவப் பாதுகாப்புக்கு விவசாயம், இயற்கை பேரிடர் போன்றவைகளுக்கு உதவும் வகையில் உள்ளது
விண்ணில் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் பாய்ந்த பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் , இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைகோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 17 டன் செயற்கைகோள்கள் வணிக ரீதியிலானவை. இன்று 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அனுப்பப்பட்டு உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெற்று உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டின் மொத்த எடையில் 56 சதவீத எடை வெளிநாடு செயற்கை கோள்களுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளது. இதுவரை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நிலவுக்கும், செவ்வாய்க்கும் மட்டுமே செயற்கைகோள்களை கொண்டு சென்றுள்ளது.
இந்த ஆண்டு ராக்கெட் ஏவும் அனைத்து பணிகள் முடிந்தன. விரைவில் சூரியனின் வெளிப்புறத்தில் ஆராய்வதற்கு ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படம். இதுவும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. அந்தவகையில் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டுமே 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவதிட்டமிடப்பட்டு இருக்கிறோம் என கூறினார்.