மோடியின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 50 பெரிய திட்டங்கள் -அமித் ஷா
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், 30 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் ஒரு திட்டத்தை மட்டுமே செயல்படுத்தும் அரசுகள் மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 5 ஆண்டுகாலத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 50 பெரிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாக்கு வங்கிக்காக அல்லாமல் மக்களின் நலனுக்காகவே எந்த முடிவையும் எடுத்துள்ளது.மேலும் ஆகஸ்ட் 5ந் தேதி முதல் இந்நாள் வரை காஷ்மீரில் துப்பாக்கி சத்தம் கேட்டதேதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.