உ.பி.யில் 5 மாதத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை.. யோகி அரசு அதிரடி.!
தீபாவளிக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு “மிஷன் ரோஸ்கர்” என்ற திட்டத்தை தொடங்கத் தயாராகி வருகிறது. இது வேலையற்றவர்களுக்கும்,வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாகும்.
நவம்பர் 2020 முதல் 2021 மார்ச் வரை மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் இலக்கை உத்தரபிரதேச அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அரசு முயற்சிகளின் உதவியுடன், தனியார் துறைக்கு பல புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படும். “மிஷன் ரோஸ்கரின்” செயல் திட்டத்தை இறுதி செய்து, உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி கூறுகையில், “மிஷன் ரோஸ்கரின் கீழ், பல்வேறு துறைகள், நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வேலைகளை உருவாக்க ஒரு திட்டம் ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு துறை மற்றும் நிறுவனத்திலும் வேலைவாய்ப்பு உதவி மையம் உருவாக்கப்படும். அந்தந்த துறைகள் தொடர்பான வேலைவாய்ப்பு திட்டங்களின் பயன்களை பெற இது இளைஞர்களுக்கு தெரிவிக்கும். மாநிலத்தில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டா பேஸ் தயாரிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநரகம் ஒரு வெப்சைட் மற்றும் செயலி உருவாக்கி வருகிறது. வேலைவாய்ப்பு தொடர்பாக குறித்து ஒவ்வொரு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
நிர்வாகத் துறைகளின் கீழ், அனைத்து இயக்குநரகங்கள், நிறுவனங்கள், வாரியங்கள், கமிஷன்கள் போன்றவை எல்லாவற்றையும் கண்காணிக்க அதிகாரியை பரிந்துரைக்ப்படும் என தெரிவித்தார்.