கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி.! மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் வேலை.!
கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி மற்றும் மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் பதவியில் வேலை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் ஒரு போலீஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை அன்று, மருத்துவமனையில், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் பண உதவி அளிக்கிறார்.
மேலும், அவரது மகளுக்கு சப் – இன்ஸ்பெக்டர் பதவியில் வேலை வழங்குவதாகவும், அவருக்கு கர்மவீர் பதக்கம் மாநில அரசு வழங்கும் என்றும் முதல்வர் சவுகான் கூறியுள்ளார்.