தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழப்பு..ரூ.5,000 கோடி இழப்பு – சந்திரசேகர் ராவ்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழந்தனர், மாநிலத்திற்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதில், 50 பேர் இறந்ததாக மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியிலிருந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில், நேற்று பல தாழ்வான பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் ரூ .5 ஆயிரம் கோடிக்கு மேல் மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 1,350 கோடி ரூபாய் வேண்டுமென்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)