ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு… 50 வீடுகள் அடுத்தடுத்து சேதம்.! தற்போதைய நிலை என்ன.?

Jammu kashmir Ramban Land Slider

Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் கடந்த வியாழன் அன்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும், கூல் மற்றும் ரம்பன் பகுதி இடையே சாலை துண்டிக்கப்பட்டது. இதில் தற்போது வரையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ரம்பன் பகுதியில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும், சேதமடைந்த மின்கம்பங்கள் உள்ளிட்ட சேதமடைந்த பொதுச்சொத்துக்களை சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும்,  நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் கடும் சேதமடைந்ததற்கான காரணத்தை கண்டறிய புவியியல் நிபுணர்கள் ரம்பன் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் சீர்செய்தல், அத்தியாவசிய தேவைகளை தடையின்றி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அரசு அதிகாரிகள் குழு 24 மணிநேரமும் ரம்பனில் செயல்பட்டு வருகிறது.

ரம்பன் மாவட்ட துணை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்னும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் சூழல் நிலவி கொண்டிருக்கிறது. சாலை மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை மீட்டெடுப்பதில் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமையாக கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறோம் என்றும், மீட்பு முகாம்களில் இருக்கும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

உள்ளூர் தன்னார்வலர்கள், மாநில மற்றும் தேசிய மீட்புப்படை குழுக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ரம்பன் – கூல் இடையேயான போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனால் , சம்பர்-டிக்டோல் வழியாக மாற்றுச் சாலை இயக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்