தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50% தள்ளுபடி..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி என அறிவித்த தெலுங்கானாவை சேர்ந்த கடை உரிமையாளர்.
தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த அலங்காரப்பொருள் கடை உரிமையாளர் ஒருவர் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு பலரும் அலங்கார பொருட்கள், ராக்கி, பரிசுகள் ஆகியவற்றை வாங்க வருவார்கள். அவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் உள்ளவர்களுக்கு 50% சலுகை அளிக்கப்படும். கடந்த வருடம் கடை முடங்கியதை அடுத்து இம்முறை வியாபாரம் ஓரளவு நல்லமுறையில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.