50 பேட்டரி கார் வாங்குகிறது திருப்பதி தேவஸ்தானம்..!
திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தவிர்க்க 50 புதிய பேட்டரி கார்களை வாங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இதனால், போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் காற்றில் மாசு கலப்பதும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க விரைவில் அதிகாரிகள் பயன்பாட்டுக்காக 50 பேட்டரி கார்களை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது தேவஸ்தான அதிகாரிகள் 350 கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50 பேட்டரி கார்களை உபயோகிப்பதன் காற்றில் மாசு கலப்பதை குறைக்கலாம் என தேவஸ்தானம் கருதுகிறது. ஆந்திர அரசு 350 பேட்டரி கார்களை வாங்க தீர்மானித்துள்ளது. இதில் 50 கார்களை தேவஸ்தானம் வாங்க உள்ளது.