கடந்த புதன்கிழமை வடோதராவில் 32 வயது மதிப்புள்ள அபிஷா சுர்வே மற்றும் சுமித் நம்பியார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கள்ள 500 ரூபாய் நோட்டுகளை வைத்து பொருட்கள் வாங்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது அவர்களை பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் அபிஷா சுர்வே 152 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் , சுமித்திடம் 23 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சூரத் நகரை சார்ந்தவர்கள் என்றும் , சூரத்தில் உள்ள அபிஷேக் மங்குகியா என்ற 23 வயது இளைஞர் இடமிருந்து கள்ளநோட்டுகளை வாங்கியதாக அவர்கள் கூறினார்.
பின்னர் சூரத் சென்ற போலீசார் சஞ்சய் பர்மார் எனும் இளைஞர் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்தது காரணமாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலை வைத்து நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஆசிஷ் சுரானி , குல்தீர்ப் ரவால் , அபிஷேக் மங்குகியா மற்றும் விஷால் சுரானி ஆகிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த இளைஞர்கள் அனைவரும் 22 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் வைரம் மெருகேற்றும் வேலை செய்து வந்தனர். தற்போது வைரம் விற்பனை சரிவால் வேலைகளை இழந்த அவர்கள் கள்ள நோட்டு எப்படி செய்வது என யூடியூப் மூலம் தெரிந்து கொண்டனர்.
இவர்களில் சஞ்சய் பர்மார் மட்டும் 10 வகுப்பு மற்றவர்கள் அனைவரும் எட்டாம் வகுப்பு கூட படிக்கவில்லை சஞ்சய் தனது வீட்டில் 2 கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் மற்றும் 91 கட்டு 100 ரூபாய் நோட்டுகளும் , 14 கட்டுகள் 500 ரூபாய் நோட்டுகளை ஆகியவை போலீசார் கைப்பற்றினர். இதுவரை இவர்கள் கள்ள நோட்டு புழக்கத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விட்டுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…