சமூகவலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை! கேரள அரசு அதிரடி!

Default Image

சமூகவலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. 

மார்க்சிஸ்ட் அரசின் ஒரு கடுமையான சட்டத்திற்கு கேரளா ஆளுநரான ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒப்புதலின்படி எந்த ஒரு சமூக ஊடகங்கள் அல்லது இணையதளம் மூலமாக பதிவிடப்படும் அச்சுறுத்தலான பதிவுகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், கேரள போலீஸ் சட்டத்தில் 118 (ஏ) என்ற புதிய பிரிவை உள்ளடக்கிய சட்ட திருத்த மசோதாவில், கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் நேற்று உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் அல்லது தகவல் தொடர்பு தளங்கள் மூலமாக, எந்த ஒரு நபரையும் புண்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட பதிவுகளை உருவாக்கும் அல்லது அனுப்பும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டும் தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் அனூப் குமாரன் கூறுகையில், இந்த சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரிவு 118 (ஏ) பெண்களை சமூக ஊடக துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்காக என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் உண்மையில் புதிய சட்டத்தை அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அதிகாரிகளும், அரசாங்கம் பயன்படுத்துவார்கள் என கூறியுள்ளார்.

மேலும், இந்த சட்டத்திருத்தம் காவல்துறைக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்கும், பத்திரிக்கை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும், சுதந்திரமான பேச்சுரிமையை அச்சுறுத்தலாக்கும் என்றும்,  கட்சி மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றன. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கூறுகையில், தனிநபர்களை குறிவைத்தும் சமூக ஊடகங்களில் அதிகரித்துவரும் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்