5 ஆண்டு கால இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
இந்தியா சார்பில் 156 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் 5 ஆண்டு கால இ-சுற்றுலா விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.அதன்படி,அமெரிக்கா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் 10 ஆண்டு கால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.மேலும்,வழக்கமான சுற்றுலா விசா சேவைகளையும் மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.
முன்னதாக,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து விசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு,கவிசா விதிமுறைகளை படிப்படியாக மத்திய அரசு தளர்த்தியது.
இந்நிலையில்,156 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான 5 இ-டூரிஸ்ட் விசாக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக,மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன்மூலம்,வெளிநாட்டினர் புதிய இ-டூரிஸ்ட் விசாக்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக சுற்றுலா அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:”நீங்கள் ஆவலோடு எதிர்பாத்திருந்த இந்திய பயணத்துக்கான காத்திருப்பு முடிவடைந்துவிட்டது.சர்வதேச பயணிகளுக்கான இந்தியாவுக்கான இ-சுற்றுலா விசா,வழக்கமான சுற்றுலா விசா சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.எனவே,பயணத்துக்கு தயாராகுங்கள்’ என்று தெரிவித்துள்ளது.
Finally the wait is over for your much-awaited trip to India! Switch to your travel mode once again, as e-Tourist Visa/Regular Tourist Visa services to India have been restored for international travellers. pic.twitter.com/6QJTkXnDL7
— Ministry of Tourism (@tourismgoi) March 16, 2022