டெல்லியில் அத்துமீறி நுழைந்த 5 தீவிரவாதிகள் – உளவுத்துறை அமைப்பு.!
டெல்லியில் 5 தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிபடை வீரர்களால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து நாசகார செயல்களில் ஈடுபடுவதற்காக நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் டெல்லியில் நுழைந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால், டெல்லி உட்பட அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் வாகன கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி அதிரடி படை வீரர்களால் டெல்லி எல்லைகள் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது, டெல்லியில் உள்ள 15 மாவட்டங்கள் எங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட எல்லைப்பகுதியில் நிலவி வரும் சூழலை சாதகமாக பயன்படுத்தி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதால், எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக வட டெல்லியை அதி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மக்கள் அதிகமாக கூடும் சந்தை, மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் என பல இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும், டெல்லியில் வரும் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.