காஷ்மீர் எல்லையில் தொடரும் பதற்றம்… 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என காஷ்மீர் பாதுகாப்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கையில் 34 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவு வீரர்கள், 9 உயர் சிறப்புப் படை பிரிவினர், காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த என்கவுன்டர் நடந்தது. இந்த என்கவுண்டரில் தான் லஷ்கர்-இ-தொய்பா பயங்காரவாத அமைப்பை சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீரில் பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து.. 36 பேர் உயிரிழப்பு
இன்னும் காஷ்மீர் எல்லையில், தேடுதல் பணி தீவிரமடைந்து வருவதாகவும், முன்னதாக, எல்லைக்கு அப்பால் இருந்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 15ஆம் தேதி புதன்கிழமை அன்றும் உரி செக்டார் எல்லை வழியாக ஊடுருவ முயன்றவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து ‘ஆபரேஷன் காளி’ என்ற கூட்டு நடவடிக்கையின் போது இந்த ஊடுருவல்களை தடுத்துள்ளனர்.