டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது!
டெல்லியின் ஷகார்பூர் பகுதியில், காவல் துறையில் சிறப்புப் பிரிவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் இன்று கைது செய்துள்ளது.
டெல்லியின் ஷகார்பூர் பகுதியில், காவல் துறையில் சிறப்புப் பிரிவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் இன்று கைது செய்துள்ளது. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், இருவர் பஞ்சாபை சேர்ந்தவர் என்றும், மீதமுள்ள மூன்று பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் காலிஸ்தான் உடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற ஆவணங்களை மீட்டுள்ளனர். இதற்கிடையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்களை கைது செய்ததை தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் விழிப்புணர்வு அதிகரித்து சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு பிறகு நாங்கள் 5 பேரை கைது செய்துள்ளோம். ஆயுதங்கள் மற்றும் பிற வன்முறையை தூண்டும் ஆவணங்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
மேலும், அவர்களில் சிலருக்கு பயங்கரவாதி குழுக்களுடன் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து முழுமையான தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது என்றும், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.