மகாராஷ்டிராவின் காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.!
மகாராஷ்டிராவின் காஜல்புராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், வீட்டிற்குள் இருந்த மக்கள் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்க்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
NDRF- Today at about 1850 hrs, A G+4 building has collapsed in Kajalpura area of Mahad Tehsil in Dist.Raigad, Maharashtra.
About 50 people are feared to be trapped. 3 teams of 5 BN NDRF have moved. Teams have moved hrs with all necessary CSSR equipment, Canine Squad etc @NDRFHQ pic.twitter.com/R9L4kiMHlc— NavaBharat (@enavabharat) August 24, 2020