#BREAKING: 5 மாநில தேர்தல்: பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..!
பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு இன்று வரை( ஜனவரி 31 வரை) தடை விதித்தது. இதனால், இன்று முதல் இந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கும் என எதிர்பட்டப்பட்ட நிலையில், பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டித்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் கூடுதல் தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- அதன்படி, பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10-லிருந்து 20 ஆக அதிகரிப்பு.
- உள்ளரங்கு பரப்புரைகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300லிருந்து 500 ஆக அதிகரிப்பு.
- அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொரோனா நடத்தை மற்றும் வழிகாட்டுதல்கள் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தேர்தல் ஆணையம் பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 7 மணி முதல் மார்ச் 7 ஆம் தேதி மாலை 6:30 மணி வரை எந்தவித கருத்துக் கணிப்புக்கும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.