5 மாநில தேர்தல் : ஜனவரி 22-ஆம் தேதி வரை பரப்புரைக்கு தடை – தேர்தல் ஆணையம்
தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பேரணி நேரடி பரப்புரைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பேரணி நேரடி பரப்புரைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, ஜனவரி 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் அல்லது 300 பேருக்கு மிகாமல் ஒரு உள்அரங்கத்தில் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.