5 மாநில தேர்தல்! இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் – காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடக்கம்!

Mallikarjun Kharge

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும் தேர்தல் நடையேற உள்ளது.

இதுபோன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவ.14ம் தேதியும், ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.23ம் தேதியும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் நவம்பர் 30ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியல், வாக்குறுதி உள்ளிட்டவை வெளியிட்டு வருகின்றனர். அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் கவனம் வாந்தவையாக பார்க்கப்படுகிறது.

5 மாநில தேர்தல்.! நவம்பர் 7 முதல் தேர்தல்.. டிசம்பர் 3இல் ரிசல்ட்.! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

இந்த நிலையில்,  டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமை மல்லிகார்ஜுன தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. இதுபோன்று, சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தலுக்கான எஞ்சிய வேட்பாளர் பட்டியலும் இறுதி செய்யப்பட உள்ளது.

எனவே, இந்த கூட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் எஞ்சிய  வேட்பாளர்கள் பெயர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் ஐந்து மாநிலங்களில் 4 மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்திலுள்ள 230 தொகுதிகளில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

சத்திஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மட்டுமே தாமதமாகி உள்ளது. அதுவும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்