5 மாநில தேர்தல்..! காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது..!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் கட்சி அனைத்து செயல்பாடுகளிலும் முழு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, காங். மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரிங்கா காந்தி, ப.சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டத்தில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.