5 மாநில சட்டசபை தேர்தல் – தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக!

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.
அதன்படி, உத்தரபிரதேசத்திற்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட 7 பேர் துணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.
கோவாவிக்ரு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய ரயில்வே தர்ஷனா ஜர்தோஷ் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, பாஜகவின் பொறுப்பாளராக இருப்பார்.
மத்திய அமைச்சரவை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக தலைமை தாங்குவார். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவுத்துறை மீனாட்சி லேகி மற்றும் மக்களவை எம்பி வினோத் சவ்தா ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.
மேலும், தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு மணிப்பூருக்கான தேர்தக் பொறுப்பாளர்கரை நியமிக்கப்பட்டுள்ளது என்று தேசியத் தலைவர் ஜேபி. நட்டா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.