வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5% ஆக குறைப்பு..!
பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் சில குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் மீதான வரி குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த முறை பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கான சிறப்பு அறிவிப்பு எதுவும் இல்லை. கார்ப்பரேட்டர் வரியை குறைத்ததன் மூலம் வணிகர்களுக்கு லாபம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் வரி செலுத்துவதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது, பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ஆபரண கற்களுக்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரசாயனங்கள் மீதான இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.