முன்னாள் வீரர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு – யோகி ஆதித்யநாத்

Default Image

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னாள்  பணியாளர்களுக்கான குரூப் ‘சி’ பதவிகளில் இருப்பவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று சேவைகளிலிருந்தும் ஓய்வு பெற்ற மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறுவார்கள் என்று ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்த வேலைக்கு தகுதி பெற ஒருவர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மட்டத்திலும் ‘கிடைமட்ட அடிப்படையில்’ இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியை மாநில அரசு சமீபத்தில் ரூ .25 லட்சத்திலிருந்து ரூ .50 லட்சமாக உயர்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்