அயோத்தி கோவில் விழா மேடையில் பிரதமர் உட்பட 5 பேருக்கு அனுமதி.!
அயோத்தியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பிரமாண்டமான ராம் கோயில் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விருந்தினர் பட்டியல் அழைப்பிதழ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேலும் மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது கொரோனா காலம் என்பதால் அழைப்பிதழ் பட்டியலில் பெயர்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய ஐந்து பேர் மேடையில் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விருந்தினர் இடத்திலிருந்து வெளியேறினால் அவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் சம்பத் ராய் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்று போராட்டத்தில் நடுவில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட “பூமி பூஜன்” நிகழ்ச்சிக்கு 175 பேருக்கு அழைப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மற்றும் சில விருந்தினர்களின் பாதுகாப்பிற்காக விழாவிலிருந்து வெளியேறி எல்லோரும் சென்றபின் அந்த இடத்தைப் பார்வையிடுவேன் என்று இன்று காலையில் உமா பாரதி கூறினார்.