மணப்பெண்ணை ஏற்றி சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து..குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.!
மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் திருமண விழாவை முடித்துவிட்டு புது மணப்பெண்ணைஏற்றிச் சென்ற லாரி ஆற்றில் விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு, தாதியா மாவட்டத்தில் கிளம்பிய அந்த லாரி புஹாரா கிராமத்தை அடைந்தபோது, லாரியின் சக்கரம் நழுவி அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் 65 வயது மூதாட்டி, 18 வயது இளைஞன் மற்றும் இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவர்.
விபத்து நடந்த இடத்தில மீட்பு பணிகள் இன்னும் நடந்து வருகிறது என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இருபத்தி நான்கு பேர் காயமடைந்துள்ளனர், சிலர் விபத்தில் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்ற்னர்.