டெல்லி, சுரங்கப்பாதையில் தனியார் ஊழியரை மிரட்டி 2 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்ட் ஊழியராக பணியாற்றி வரும் பட்டேல் சஜன் குமார் அண்மையில், தனது தொழில் நிமித்தமாக 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, டிரைவருடன் காரில் குருகிராமிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பிரகதி மைதான சுரங்கப்பாதைக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தது. அந்த சமயம் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் காரை வழிமறித்து, டிரைவர் மற்றும் படேல் சஜன் குமாரை மிரட்டி 2 லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து சென்றனர்.
பட்ட பகலில் நடைபெற்ற இந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் டெல்லி போலீசார் இந்த வழிப்பறி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் களமிறங்கினர்.
இதில் முதற்கட்டமாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 பேர் என மொத்தமாக 5 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து டெல்லில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும். டெல்லி மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒருவரை தேர்வு செய்யுங்கள். மத்திய அரசால் டெல்லியை பாதுகாப்பாக மாற்ற முடியவில்லை என்றால், அதை எங்களிடம் (மாநில அரசிடம்) ஒப்படையுங்கள். என விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி காவல் துறை மத்திய அரசு கட்டுப்பட்ட்டில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…