கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 524 ஆக உயர்வு.!
கேரளாவில் இதுவரை 524 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில், இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனா கண்டறியப்பட்டவர்கள் மலப்புரம் 3, பதனம்திட்டா 1, கோட்டயம் 1 என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இதுவரை 524 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல் கேரளாவில் இதுவரை 38,547 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, 37,727 பேருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. தற்போது கண்காணிப்பில் 31,616 பேர் இருக்கின்றார்கள் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
May 12 #COVID19 Update
5 new cases reported.
District level
Malappuram: 3
Pathanamthitta:1
Kottayam:1????31,616 under observation
???? 38,547 tested; 37,727 are -ve
???? 3,914 covered in sentinel surveillance; 3,894 are -ve.Wash hands???????? | Wear masks ???? | Social Distancing ↔️ pic.twitter.com/meuSwNnFzA
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 12, 2020