அப்பர் சுபன்சிரியில் இருந்து காணாமல் போன 5 இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மற்றொரு பக்கத்திற்குச் சென்ற 5 வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என லெப்டினன்ட் கேணல் ஹர்ஷ் வர்தன் பாண்டே கூறினார்.
காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் உறுதிப்படுத்தியதாக பாண்டே கூறினார். செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக மறுபுறம் சென்றனர். அவர்களை நேற்று சீன இராணுவம் காணாமல் போன இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5- ம் தேதி சீனா இராணுவம் அருணாச்சல பிரதேசத்தில் அப்பர் சுபன்சிரியின் நாச்சோ பிராந்தியத்தில் இருந்த 5 வீரர்கள் கடத்தியதாக கூறப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து காணாமல் போன 5 இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் உறுதிபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…